For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியின் ‘காலா கரிகாலன்’… யார் அந்த ‘காலா‘ சாமி

ரஜினிகாந்த் ரஞ்சித் கூட்டணியில் உருவாக உள்ள காலா திரைப்படத்தின் பெயர் ஒரு சிறு தெய்வத்தின் பெயராம்.

Google Oneindia Tamil News

சென்னை: கபாலி படத்தை அடுத்து ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியில் காலா படம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 10 மணிக்கு காலா படம் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியலோடு சேர்த்து சினிமா உலகிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

Kaala is deity in Nellai district

இந்தப் படத்தின் பெயர் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசும் போது, காலா என்பது நீதியும் நேர்மையும் கொண்ட தமிழ் அரசர் கரிகாலனை குறிக்கும். திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ கடவுள் 'காலா' என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட மக்களிடம் விசாரித்த போது, நெல்லை மக்களால் வழிபடும் 'காலா' என்ற சிறு தெய்வம் நாட்டார் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர். 7 முதல் 21 பூடம் வரை வைத்து இந்தக் கடவுளை வழிபடுவார்களாம்.

இந்த வழிபாட்டில் மாசானம், காலன், மாடன் என்று 21 வகையான காவல் தெய்வங்கள் வைத்து வழிபடுவார்கள். அதில் ஒன்றுதான் 'காலா' என்கிற காவல் தெய்வம் என்கிறார் நெல்லையில் சமூக செயல்பாட்டாளரான லேனா குமார்.

நெல்லை மாவட்ட மக்களால் வழிபடும் காவல் தெய்வத்தின் காலா என்ற பெயர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயராக உருவெடுத்துள்ளதால் இருப்பதால் தேசிய ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

English summary
Kaala, which is Rajini’s new movie name, is deity in Nellai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X