ரஜினி 31-இல் ரசிகர்களுக்கு இடபோகும் கட்டளை என்ன தெரியுமா?... கலைஞானம் கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை: அரசியலுக்கு வரும் ரஜினி வரும் 31-ஆம் தேதி ஒரு தேதியை கூறி அன்று ரசிகர்கள் தயாராக இருக்குமாறு கட்டளையிடுவார் என்று கலைஞானம் தெரிவித்தார்.

  ரஜினிகாந்த் 2-ஆவது முறையாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31-ஆம் தேதி கூறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி தனிக் கட்சி தொடங்குவாரா அல்லது யாருடனாவது கூட்டணியா என்பது போல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சி சேனலுக்கு கலைஞானம் அளித்த பேட்டியில் கூறுகையில், அரசியலுக்கு வருவார் என்று நான் நம்புகிறேன். அதே சமயத்தில் மிகவும் உஷாராக இருக்கிறார் என்பதும் எனக்கு தெரிகிறது.

   நண்பர்கள் ரஜினியிடம்...

  நண்பர்கள் ரஜினியிடம்...

  அரசியலுக்கு தொண்டனாக இருந்து வந்தால் இத்தனை யோசனைகள் ரஜினிக்கு இருக்காது. அவர் ஏன் அரசியலில் நிற்க கூடாது என்று எங்களை போன்ற நண்பர்கள் ரஜினியிடம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

   எண்ணம் தோன்றியது

  எண்ணம் தோன்றியது

  அதை எல்லாம் உள்வாங்கி கொண்டே இருந்தார். சோவிடம் பழக பழக அரசியலை அவர் புரிந்து கொண்டார். இதனால் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொண்டர்களும் விரும்புகிறார்களே நாம் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

   நோட்டு பற்று

  நோட்டு பற்று

  நாட்டு பற்றுடன் தேர்தல் நடந்த காலம் போய் தற்போது நோட்டு பற்றுடன் தேர்தல் நடக்கும் நிலையால் ரஜினி சற்று யோசித்தார். ஏனென்றால் அவர் சம்பாதித்துள்ள பணம் உழைத்து சம்பாதித்தது. கொள்ளையடித்த பணம் இல்லை. பணம் கொடுத்தால்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்றால் அவர் உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி செலவிடுவது என்ற யோசனைதான் அவரிடம் ஓடியது. ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் 31-ஆம் தேதி அதற்குரிய தேதியை கூறுவார்.

   சேற்றில் ஒரு கால்...

  சேற்றில் ஒரு கால்...

  ரஜினியை நம்பி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்தவர்களுக்கு ஒரு செட்டில்மென்ட் செய்து விட்டு பிறகு, வருவார். காலா மற்றும் 2.0 படங்கள் ரிலீஸ் தேதிக்கு பிறகு அவரது அரசியல் பிரவேசம் இருக்கும் என்பது எனது கருத்து. அதற்கு முன்பு ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்க ரஜினிக்கு மனமில்லை. எனவே அவர் அரசியலுக்கு வருவார். ஆனால் அதற்கான காலத்தை எடுத்துக் கொள்வார். போர் ஆரம்பிப்பதற்கு கொடி கட்டப்பட்டுள்ளது என்றார் கலைஞானம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Producer Kalaignanam says that Rajini will announce the date of his entry into politics on December 31.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X