நேரலைக்கு தயாராகிறது கலைஞர் டிவி
கலைஞர் டிவி நேரலைக்கு தயாராவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதாக மருத்துவமனை அறிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு உடனடி மாற்றங்கள் கோபாலபுரத்தில் நடந்து வருகிறது.

துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட எல்லோரும் கண்ணீருடன் கதறி அழுதுகொண்டே கோபாலபுரம் இல்லத்திற்குள் சென்றார்கள். மற்றொருபுறம், கோபாலபுரம் 4-வது தெரு போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தொண்டர்கள் உள்ளிட்ட யாரையுமே போலீசார் அந்த பகுதிக்குள் விட அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கருமேகம் சூழ்ந்து மழை கொட்டி வந்தாலும் தொண்டர்கள் கதறியபடி கண்ணீர் வடித்து கோபாலபுரத்தையே சுற்றி சுற்றி வருகிறார்கள். இதனால் ஏராளமான போலீசார்கள் கோபாலபுரம் பகுதியில் பாதுகாப்பில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
Kalaignar TV sets up outside #Karunanidhi ‘s Gopalapuram residence even as supporters slowly gather. pic.twitter.com/h16bdPxJvz
— Anna Isaac (@anna_isaac) August 7, 2018
இதனிடையே "கலைஞர் டிவி" நேரலை நிகழ்ச்சிக்கு தயாராகும் வேலையில் இறங்கி உள்ளது. நேரலையில் ஒளிபரப்பக்கூடிய உபகரணங்களும் வீட்டு வாயிலின் முன்பு இறக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே வீட்டினுள் இருந்து கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications