பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது
சென்னை: இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்பட அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேகலாயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கலாம், ஷில்லாங் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அவரது உடல் தற்போது டெல்லி கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் மரபுகள் தாண்டி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில்தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அப்துல் கலாமின் அண்ணன் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து இன்று 12.30 மணியளவில் டெல்லி வந்தடையும் அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்ள இருக்கின்றார். டெல்லியில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர், நாளை காலை 10 மணியளவில் தனி ராணுவ விமானம் மூலமாக மதுரை அல்லது ராமேஸ்வரத்திற்கு அவரது நல்லுடல் கொண்டு செல்லப்படும் என்றும், உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் இன்னும் அரசால் தேர்வு செய்யப்படவில்லை. முப்படை அதிகாரிகள் ராமேஸ்வரத்திற்கு முன்னதாக சென்று இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வார்கள்; தற்போதைய தகவல்களின்படி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான காலி இடம் இருக்கிறது; அதேபோல் தனுஷ்கோடி செல்லும் பாதையிலும் அரசு நிலம் இருக்கிறது; இந்த இரண்டு இடங்களில் ஒன்றில் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications