தலைமைக்கு தகுதியில்லாதவர் கமல்.... தினகரனுக்கு பொறுமை அவசியம் - திவாகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் அரசியல் தலைமைக்கு தகுதியில்லாதவர் என்று திவாகரன் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் கமலின் டிவிட்டர் பதிவுகள் குறித்து திவாகரன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் ஆர்.கே நகர் வெற்றி குறித்தும், தினகரன் மீதான கமலின் விமர்சனம் குறித்தும் பேசினார்.

Kamal doesn't have leadership quality - Dhivakaran

தேர்தல் வெற்றி பற்றி பேசிய அவர் ''ஆர்.கே நகர் தேர்தல் மட்டுமில்லை, இந்தியாவில் எந்த இடத்தில் தேர்தலில் நடந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். எங்களால் எங்கு வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும்'' என்று குறிப்பிட்டார்.

ஆர்.கே நகர் தேர்தல் வெற்றி பணத்தின் மூலம் வாங்கப்பட்டது என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த திவாகரன் ''கமல் தலைமைக்கு தகுதியில்லாதவர். அவரது ட்விட்டர் பதிவுகளே தலைமைக்கு தகுதியில்லாதவர் என்பதை வெளிக்காட்டுகிறது.'' என்றார்.

மேலும் ரஜினி குறித்தும் இவர் பேசினார் ''ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே ரஜினியும், கமலும் பேசுகின்றனர். இல்லையென்றால் அவர்கள் அமைதியாக இருப்பார்கள்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் இவர் தினகரனுக்கு தன்னுடைய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதில் ''தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏவாக சட்டசபை செல்கிறார். அவர் சட்டசபையில் பொறுமை காக்க வேண்டும். '' என்று குறிப்பிட்டு உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dhivakaran says that Kamal has no leadership. He also added tha Kamal twitter postes shows his below level maturity in politics. He says that Kamal and Rajini doing politics because of the death of Jayalalitha.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற