மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விசில் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல்ஹாசன்- வீடியோ
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் விசில் செயலியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன் விசில் செயலி, மக்கள் குறைகளை ஒரே நொடியில் சரி செய்யும் மந்திரக்கோல் அல்ல என்றார்.

விசில் செயலி காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகவும் இருக்கும், போலீஸ்க்கோ அல்லது அதிகாரிகளுக்கோ மாற்று அல்ல என்றும் அவர் கூறினார்.

உங்கள் பகுதியின் தொடர் தவறுகளை சொல்ல விரும்புவோர், அபாயச் சங்கு எனும் மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம் என்றும் கமல் கூறினார். மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் நாளை திருவள்ளூரில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பேன் என்றும் கமல் கூறினார்.












Click it and Unblock the Notifications