For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்த்தாண்டன்துறையில் 80 மீனவர்களை காணவில்லை... மக்கள் பட்டியலை வெளியிட்டனர்!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறையில் 80 மீனவர்களை காணவில்லை என்று அந்த கிராம மக்கள் பட்டியலை தயாரித்து வைத்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஓகி புயலின் போது கடலுக்கு சென்ற 80 மீனவர்களை காணவில்லை என்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் பட்டியலை தயாரித்து வைத்துள்ளனர்.

தமிழக, கேரள எல்லையை யொட்டியுள்ளது மார்த்தாண்டன்துறை கிராமம். கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி அரபிக் கடல் அருகே உள்ளது இந்த கிராமம். கடந்த 30ம் தேதி கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயலால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஒருவாரமாகியும் இன்னும் கரை திரும்பவில்லை.

Kanyakumari district Marthandanthurai village people released a list of nearly missing 80 fishermen

மீனவர்களின் நிலை என்ன, அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா என எந்தத் தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் குறித்து தமிழக அரசு எந்த அதிகாரப்பூர்வ பட்டியலையும் வெளியிடாத நிலையில் மார்த்தாண்டன்துறையை சேர்ந்த 80 மீனவர்களை காணவில்லை என்று அந்த கிராம மக்கள் பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர்.

கரை திரும்பாத மீனவர்கள் பட்டியலை மார்த்தாண்டன்துறையில் மக்கள் வெளியிட்டுள்ளனர். மார்த்தாண்டன்துறையில் மீனவர்கள் பெயருடன் பட்டியலை வைத்துள்ளனர் மக்கள். இந்த மீனவர்களின் நிலை என்ன என்பதை அரசு கண்டறிய வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Kanyakumari district Marthandandurai village people released a list of nearly missing 80 fishermen with names, and alsorequest government to take action to find them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X