கன்னியாகுமரியில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்- சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டிய சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். தமிழகம் முழுவதும் பல இடங்களில் நாளை இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Kanyakumari people today celebrated ramzan today

இதையொட்டி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் இன்று ரம்ஜான் கடைபிடிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அருகே இடலாகுடி பகுதியில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ramzan festival celebrated in Kanyakumari by tamilnadu thowheed jamath.
Please Wait while comments are loading...