அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்க கருணாநிதி குடும்பத்தில் பலரும் ஆதரவு.. ஆனால்!
அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்க கருணாநிதி குடும்பத்தில் ஒருதரப்பு எதிர்க்கிறதாம்.
Recommended Video

சென்னை: திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்க கருணாநிதி குடும்பத்தில் ஒருதரப்பினர் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் அழகிரி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அண்மைக்காலமாக திமுக தலைவர் கருணாநிதியும் தீவிர ஓய்வில் இருக்கிறார்.
திமுகவில் ஒற்றை தலைமையாக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென கருணாநிதி அழைத்தால் திமுகவில் இணைவேன் என அழகிரி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரிக்கு கருணாநிதி குடும்பம் ஆதரவு
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்ப்பதற்கு கருணாநிதி குடும்பத்தில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

அழகிரியுடன் பேச்சுவார்த்தை
கடந்த சில மாதங்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சுமூகமாகவே நடைபெற்று வந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே தாம் திமுகவில் மீண்டும் இணைய தயார் என்கிற அழகிரியின் கருத்து வெளிப்படுத்தப்பட்டதாம்.

கருணாநிதி குடும்பம் எதிர்க்கவில்லை
யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அழகிரியும் இப்படி கூறியிருக்கிறார். ஆனால் அழகிரியின் நேற்றைய பேட்டியை கருணாநிதி குடும்பத்தில் கிச்சன் குயின் அணி மட்டும் கடுமையாக எதிர்க்கிறதாம்.

இரட்டைத் தலைமை ஆபத்து
இதுவரை ஒற்றைத் தலைமை இருக்கிறது. இனி இரட்டை தலைமை உருவாவது நல்லது அல்ல. தேவையில்லாத குடைச்சல் நமக்கு எதுக்கு என அந்த அணி தூபம் போட்டுக் கொண்டிருக்கிறதாம்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications