For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்ல கால்வாயை தூர் வாருங்க.. கணக்கெடுப்புக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய கருணாநிதி குடும்பம்

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ள நிவாரண நிதிக்காக திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு கணக்கெடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களிடம், முதலில் கால்வாயைத் தூர் வாரும் வேலையா சரியா செய்யுங்க என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Karunanidhi family rejects flood relief assistance

திமுக தலைவர் கருணாநிதி வசித்து வரும் கோபாலபுரம் பகுதியிலும் கணக்கெடுப்புப் பணி நடந்தது. அதன்படி கருணாநிதி வீட்டுக்கும் நேற்று ஊழியர்கள் சென்றபோது அங்கிருந்த கருணாநிதியின் உதவியாளர்கள் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், மழை நீர்க் கால்வாய் சரியாக தூர் வாரப்படாததால்தான் இந்தப் பகுதியிலும் மழை நீர் புகுந்தது. இனிமேலாவது கால்வாயை சரியாக தூர் வாரச் செல்லுங்கள். கருணாநிதி குடும்பத்தினர் வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பு தேவையில்லை என்று கூறி விட்டனர் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

பெரு வெள்ளம் சென்னையைச் சுழற்றியடித்தபோது கருணாநிதி வீட்டு காம்பவுன்ட் சுவருக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது என்பது நினைவிருக்கலாம்.

English summary
DMK president Karunanidhi's family rejected flood relief assistance and sent back the revenue officials who came to collect the details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X