கருணாநிதி சட்டசபை வைர விழா... இலவச மருத்துவ முகாம்.. ஏராளமானோர் பங்கேற்று பயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபையில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி என்பதையே கண்டறியாதவர்.

Karunanidhi’s diamond jubilee, free medical camp in Kanjeevaram

1957 முதல் 2017 வரை தொடர்ந்து 60 ஆண்டுகள் சட்டசபையில் உறுப்பினராக இருந்து கருணாநிதி பணியாற்றி வருகிறார். இதனை கருணாநிதியின் சட்டசபை வைர விழாவாக திமுக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கருணாநிதியின் வைரவிழா மற்றும் 94வது பிறந்தநாளை ஒட்டி தேசிய அறக்கட்டளையுடன் இணைந்து திமுக இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Karunanidhi’s diamond jubilee, free medical camp in Kanjeevaram

இந்த நிகழ்ச்சியில் தேசிய அறக்கட்டளை தலைவர் சி.வி. சதிஷ் குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்எல்ஏ, இ. கருணாநிதி எம்எல்ஏ, அமுதா நாகலிங்கம், நாகலிங்கம், மு. ரஞ்சன், விஸ்வநாதன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Free medical camp was held in Kanjeevaram by DMK with join National Trust for Karunanidhi’s diamond jubilee celebration.
Please Wait while comments are loading...