முரசொலி எனும் முதல் குழந்தையை பார்த்து சிலாகித்த கருணாநிதியின் நெகிழ வைக்கும் வீடியோ!
ஓராண்டிற்குப் பின்னர் நேற்று மாலை முரசொலி அலுவலகம் வந்த திமுக தலைவர் கருணாநிதி கண்காட்சியை சுற்றிபார்த்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை: தனது முதல் குழந்தையான முரசொலி அலுவலகத்தில் பவள விழா கண்காட்சியை திமுக தலைவர் கருணாநிதி நேற்று பார்வையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் முழுவதும் மருத்துவர்களின் சிகிச்சையிலேயே இருந்து வந்தார். மேலும் தொற்று ஏற்படாமல் இருக்க அவரை பார்ப்பதை அரசியல் கட்சியினர், தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதனால் முரசொலி பவள விழா கொண்டாட்டம், கருணாநிதி சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த வைரவிழா கொண்டாட்டம், பிறந்தநாள் கொண்டாட்டம் என எதிலும் அவரை தொண்டர்கள் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கருணாநிதி முரசொலி அலுவலகத்திற்கு வந்தார்.
முதன்மை செயலாளர் துரைமுருகன், கருணாநிதியுடன் சேர்ந்து காரில் வந்தார். கருணாநிதியுடன் ஸ்டாலின், செல்வி, தமிழரசு உள்ளிட்டோரும் வந்திருந்தனர். முரசொலி அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த முரசொலி காளையின் புருவத்தை பார்த்து நெகிர்ந்தார். தொடர்ந்து முரசொலி அலுவலகத்திற்குள் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களளைப் பார்த்தார்.
ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் முரசொலி செல்வம் நீதிமன்றத்தில் நின்ற காட்சியை விளக்கும் விதமாக கூண்டில் செல்வம் இருப்பது போன்ற அரங்கும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்டாலின் கருணாநிதிக்கு விளக்கிச் சொன்னார். இதற்கு அடுத்தபடியாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது மெழுகு சிலையை கருணாநிதி மிகவும் ஆர்வத்துடன் ரசித்தார். ஸ்டாலின் அந்த சிலை பற்றிக் கூறியதும் புன்முறுவலிட்டார் கருணாநிதி.
முரசொலி அலுவலக ஊழியர்கள் உரையாடியவர் அங்கிருந்த பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். பின்னர் தன்னுடைய கைகளை அசைத்து கருணாநிதி தொண்டர்களை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஓராண்டிற்குப் பிறகு கருணாநிதியை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உறைந்து போயினர். இப்போது சமூக வலைதளங்களில் கருணாநிதியின் இந்த வீடியோ வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications