மைனா ஷூட்டிங் நடந்த இடம்.. எப்போதும் ஜில் ஜில் சூழல்.. கொழுக்குமலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழகத்தின் மிகச் சிறப்பான கோடை வாசஸ்தலங்களில் ஒன்றுதான் தேனி மாவட்டத்தின் கொழுக்குமலை. மிக சிறந்த தட்பவெப்பத்துடன் கூடிய இந்த இடம் தமிழகத்தின் பூலோக சொர்க்கமாகும். இன்று இது தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிதான் கொழுக்குமலை. போடி மெட்டு தாண்டி மூணாறு செல்லும் சாலையில் பயணித்தால் கொழுக்குமலையை அடையலாம்.

சூரிய நெல்லி என்ற இடம் வரை வாகனங்கள் செல்ல முடியும். அதன் பிறகு கொழுக்குமலை செல்லும் பாதை வரும். அதில் ஜீப்பில் மட்டுமே பயணிக்க முடியும்.

எப்போதும் ஜில் ஜில்

எப்போதும் ஜில் ஜில்

எப்போதும் ஜில் ஜில் குளிர்ச்சியுடன் கூடிய பகுதிதான் கொழுக்குமலை. இங்கு ஆண்டுதோறும் குளிர்ச்சி மட்டுமே நிலவும். வெயிலைப் பார்க்கவே முடியாது. இதற்காகவே இங்கு ஆண்டுதோறும் பெருமளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.

ஷூட்டிங் ஸ்பாட்

ஷூட்டிங் ஸ்பாட்

தமிழகத்திலும் கேரளாவிலுமாக இந்த கொழுக்கு மலை பரவிக் கிடக்கிறது. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் இரு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள். இங்குதான் மைனா படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தேயிலை

சிறந்த தேயிலை

அட்டகாசமான தேயிலைத் தோட்டங்கள் இங்கு உள்ளன. இங்கு உலகிலேயே சிறந்த தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தவகையிலும் கொழுக்கு மலை, குரங்கணி, டாப் ஸ்டேஷன் பகுதிகள் பிரபலமானவை.

ஓ.பி.எஸ். தொகுதி

ஓ.பி.எஸ். தொகுதி

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பகுதி கொழுக்குமலை. மிகவும் ரம்மியமான இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருப்பது தேனி மாவட்ட மக்களை அதிர வைத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kolukkumalai is one the finest tourist places in Tamil Nadu and forest fire has engulfed this beautiful hill top.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற