கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் துணைவேந்தர் கணபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவி இடத்திற்கு துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சம் வாங்கி இருக்கிறார். சுரேஷ் என்பவரிடம் கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Kovai Bharathiyar universiity Former vice chancellor Ganapathi releases in bail

இதுகுறித்து சுரேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.29 லஞ்சம் காசோலையை சுரேஷிடம் கொடுத்து அனுப்பினர்.

இந்த காசோலையை வாங்கும் போது கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவர் மீது வழக்கு பதியப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதமாக சிறையில் இருந்த கணபதி பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்நிலையில் நேற்று கணபதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார் கணபதி. இவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தால் வாங்கப்பட்டு உள்ளது. இவர் கோவையைவிட்டு வெளியே செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai high court gives Condition bail to Ganapathi Former vice chancelor of Kovai Bharathiyar universiity. Ganapathi have been arrested last month by bribe control department.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற