For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் தொடரும் நிலநடுக்கம்! கட்ச் பகுதி ஒரே நாளில் 4 முறை குலுங்கியதால் பீதி!

குஜராத்தில் நிலநடுக்கம் தொடர் கதையாகி வருகிறது. கட்ச் மாவட்டம் ஞாயிறன்று மட்டும் 4 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.

By Mathi
Google Oneindia Tamil News

பூஜ்: குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 2001-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்த கட்ச் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 70 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன.

gujarat

இவை பெரும்பாலும் 2001-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட கட்ச்/சவுராஷ்டிரா பகுதியிலேயே ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ரிக்டரில் சுமார் 4 அலகுகளாகவே பதிவாகி இருந்தன.

இது ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு கட்ச் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தால் கட்ச் பகுதி அதிர்ந்தது.

இதனால் கட்ச் மாவட்டம் நிலநடுக்க பீதியில் உறைந்து போயுள்ளனர்.

English summary
An earthquake of magnitude 4.0 on Richter scale shook parts of Gujarat's Kutch district on Sunday, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X