சபரிமலையில் மகரஜோதி- சரண கோஷம் முழங்க தரிசித்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள்!

Written By:
Subscribe to Oneindia Tamil

பம்பை: சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதியை சரண கோஷம் முழங்க லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.

மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. இன்று மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது.

sabarimalai

முன்னதாக மகர விளக்கு பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலங்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை கொண்டு வரப்பட்டு சபரிமலை சென்றடைந்தது. 18 படிகள் வழியாக சன்னிதானத்துக்கு இந்த திருவாபரணங்கள் வந்தடைந்தன.

இவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தென்பட்டது.

sabarimalai1

3 முறை தோன்றிய மகரஜ ஜோதியை சுவாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷங்கள் முழங்க லட்சக்கனக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். மகரஜோதியை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலையில் செய்யப்பட்டிருந்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lakhs of Ayyappa devotees were witnessed the Makara jyothi at Sabarimala on Sunday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற