சமூக வலைதளங்களில் சரவெடியாக பொறி கிளப்பும் "லட்சுமி" வெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  லட்சுமி... சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறாள்?- வீடியோ

  சென்னை : லட்சுமி குறும்படத்தில் பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பல வகையிலும் நெட்சன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்த வகையில் லட்சுமி பாரதி கண்ட புதுமைப் பெண் என்று அவர்கள் டுவிட்டரில் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.

  லட்சுமி என்ற பெயரில் வெளிவந்துள்ள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணின் கதை பற்றிய குறும்படம் டுவிட்டரில் விவாதப் பொருளாகி இருக்கிறது. அன்றாட வீட்டு வேலைகள், குழந்தையை பார்த்துக் கொள்வது என்று நாட்களைக் கடத்தும் ஒரு பெண், திடீரென அறிமுகமாகும் ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகுவதே இந்த குறும்படத்தின் மொத்த கதை.

  ஆனால் இந்தக் கதையில் புதிதாக அறிமுகம் ஆகும் ஆண், லட்சுமியிடம் பாரதியார் கவிதையைச் சொல்லி பாரதி கண்ட பெண் போல இருக்க வேண்டும் என்று சொல்கிறார். சமூகத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்திற்கு பாரதியின் பாடலை மேற்கோளாக பயன்படுத்தி இருப்பது பலரின் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறது.

  பாரதி தூக்குல தொங்கிடுவாரு

  டுவிட்டரில் தெறிக்கும் கருத்துகளில் சில கருத்துகள் உங்களுக்காக. பாரதியார் பெண்கள் வீட்டின் அடுப்பறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கக் கூடாது என்று சொன்னார். ஆனால் பாரதிக்கு மட்டும் இது தெரிஞ்சா ஏன்டா அந்த பாட்ட எழுதுனோம்னு தூக்குல தொங்கி இரண்டாவது தடவையா செத்துபோவாரு என்று ஆதங்கப்பட்டுள்ளார் இவர்.

  பாரதி காண துடித்த புதுமைப் பெண்ணா?

  மூணு தடவ பாத்தாச்சு. .. என்னோட அறிவுக்கு இன்னும் கூட ஒரு தெளிவு வரலை. #Lakshmi எந்த வகையில் பாரதி காண துடித்த புதுமைப்பெண் என்று படம் பார்த்தவர்கள் விளக்கம் கொடுங்கள் என்று கூறியுள்ளார் இவர்.

   அப்படி என்ன நல்ல கருத்து?

  அப்படி என்ன நல்ல கருத்து?

  எதற்காக இந்தப் படத்தை பார்த்து பலரும் வியக்கிறார்கள் என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். எந்த வகையில் இது நல்ல கருத்துள்ள குறும்படம் என்று சொல்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். பெண்களுக்கான அதிகாரம் என்பது இங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்லது இது இந்த தலைமுறையினரின் அறைவேக்காட்டுத் தனமான பார்வையா என்று கேட்டுள்ளார் இவர்.

  பாரதியார் கவித சொன்னதும் காதலிக்குது

  கல்யாணமாகி, லைப் போரடிக்கிற பொண்ணு, ஒரு பையன் வந்து பாரதியார் கவித சொன்னதும் அவன காதலிக்குது. ஏன்டா கள்ளக்காதலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா என்று கொந்தளிக்கிறார் இவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens were angered over the Lakshmi shortfilm and tweeting an opposite comments over the film and asks how it is Bharathiyar's Pudumai Penn.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற