கிணற்றுக்காக போராடும் லட்சுமிபுரம் மக்கள்... மனம் இரங்காத ஓபிஎஸ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றை பொதுமக்கள் குடிநீர்த் தேவைக்கு கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கையில் விளக்கேந்தி போராட்டம் நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணறு தேனியை அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் உள்ளது. அவருடைய கிணறுகளில் அதிக திறன் கொண்ட மோட்டர்களை வைத்து நீர் இறைப்பதால் பொதுமக்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்கவில்லை என கடந்த சில மாதங்களாக லட்சுமிபுரம் கிராம மக்கள் ஓபிஎஸ் மீது புகார் கூறி வருகின்றனர்.

Lakshmipuram people protested against Ex.CM O.Panneerselvam to hand over the well

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கே கொடுத்துவிடுகிறேன் என ஓபிஎஸ் வாக்களித்தர். ஆனால், யாருக்கும் தெரியாமல் அந்த கிணறு உள்ள நிலத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி எழுதி கிரையம் செய்துவிட்டார் எனக் மக்கள் புகார் கூறினர். ஆனால்,அந்தப் புகாரையும் ஓபிஎஸ் தரப்பில் மறுத்தனர். மீண்டும் கிணறு பொதுமக்களிடமே ஒப்படைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின.

ஆனால், கிணற்றை இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் மக்கள் பயன்பட்டுக்கு ஓபிஎஸ் கொடுக்கவில்லை என்பதால் நேற்று கையில் விளக்கேந்தி முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்து மக்கள் போராடினர். இன்று மாலை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் தரப்பு கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Theni,Lakshmipuram people protested against Ex.CM O.Panneerselvam to hand over the well for people and peple said protest will continue until ops hand over well.
Please Wait while comments are loading...