For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம் பெண் பர்தாவை அகற்றி சோதனை போட்டதா சென்னையின் பிரபல ஜவுளிக்கடை?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திருட்டு சந்தேகத்தின்பேரில், முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றி சோதனை போட்ட பிரபல ஜவுளிக்கடையை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை, டி.நகரிலுள்ளது சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை. நேற்று அக்கடைக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் ஜவுளி எடுக்க சென்றுள்ளார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு. எனவே பெண் ஊழியர்கள் உதவியோடு, அப்பெண்ணை சோதனையிட்டுள்ளனர்.

Leading textile's employees allegedly misbehave with a Muslim woman

இதில் பர்தா கிழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் சேலை எதையும் திருடவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அப்பெண்ணிடம் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனிடையே அவமானமடைந்த அப்பெண் தனது உறவினருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.

சற்று நேரத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பலர் ஜவுளி கடை முன்பு கூடி நின்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் விரோத போக்கை ஜவுளிக்கடை கடை பிடிப்பதாக கூறி கோஷமிட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சோதனையிட்ட பெண் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே குறிப்பிட்ட அந்த ஜவுளிக்கடையை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தகவலுடன் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி வருகிறது.

English summary
Chennai's leading textile's employees allegedly misbehave with a Muslim woman in the name of checking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X