For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்க்கை ஒரு வட்டம்... விஜய் அன்னிக்கே சொன்னாரு... நாமதான் கவனிக்க தவறிட்டோம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜகன்மோகினி படத்துல பேய் போட்ட பேண்ட்டை தான தம்பி, இந்த காலப் பொண்ணுங்க லெக்கிங்ஸ்னு பெருமையா மாட்டிகிட்டு திரியுறாங்க என்று ஆதங்கப்பட்டார் ஒரு கிடா மீசை பெரியப்பா. உண்மைதானே.

பழைய மாவில் இட்லி சுடும் அட்லி பற்றி மீம்ஸ் போட்டு விளாசும் 90ஸ் கிட்ஸ்சும், மில்லினியம் கிட்ஸ்சும் தாங்கள் மட்டும் எதையும் புதுசாதான் பயன்படுத்துறோமான்னு திரும்பி பார்க்க வேண்டும். அட ஆமாப்பா, நீங்களும் அட்லி மாதிரி எக்கச்சக்க ரீமேக்கை கலந்துகட்டி ஓட்டிகிட்டுதானே இருக்கீங்க.

விஜய்ணா சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் தத்துவம் 100க்கு 100 உண்மை. பழைய சமாச்சாரமெல்லாம் அப்படியே காலத்துல கரைஞ்சு மறைஞ்சு போயிடும்னு சொல்ல முடியாது. நம்ம லெக்கிங்ஸ் மாதிரி திடீர்னு வந்து கண்ணு முன்னால நிற்கும். 1980களில் உலகம் முழுக்க இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் மேல அப்படி ஒரு வெறியோட அலைஞ்சாங்க. திட்டு திட்டா வெளுத்துப் போனது முதல் ஆங்காங்கே கிழிஞ்சு போனது வரை ஜீன்ஸ் பேண்ட்டை விதவிதமா போட்டு அழகு பார்த்தாங்க. இப்போ அப்படியே உங்க ஜீன்சை கொஞ்சம் குனிஞ்சு பாருங்க. அதே சாயம் போன ஜீன்ஸும், கிழிஞ்சு தொங்குற ஜீன்ஸும் மறுபடியும் வந்திருச்சா.

சோறே சொர்க்கம் சொக்கநாதா... நாக்கு கேக்கு... நான் என்ன செய்ய?சோறே சொர்க்கம் சொக்கநாதா... நாக்கு கேக்கு... நான் என்ன செய்ய?

செளகார் ஜானகி முழங்கை

செளகார் ஜானகி முழங்கை

பழைய படங்களில் சரோஜாதேவி போட்டிருக்கும் பஃப் கை வைத்த ஜாக்கெட்டை மறக்க முடியுமா? அதேபோல சௌகார் ஜானகி அணிந்து வரும் முக்கால் கை வரை நீளும் ஜாக்கெட்டை தான் மறக்க முடியுமா? அந்த கால இளம்பெண்கள் மத்தியில் பட்டையை கிளப்பிய அந்த ட்ரெண்ட்டுகள், அத்தனை சீக்கிரம் ஃபேஷன் உலகை விட்டு மறைந்துவிடுமா என்ன? இப்போ நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பஃப் ஜாக்கெட்டையும், முக்கால் கை ஜாக்கெட்டையும் நினைத்துப் பாருங்கள்.

லோஷன் - பேஷன்

லோஷன் - பேஷன்

உடையைப் போலவே நகையிலும் பழைய மாடல்கள் மீண்டும் பரபரவென ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கின்றன. நிறைய நகைக்கடைகளில் டெம்ப்பிள் கலெக்ஷன், ஆன்ட்டிக் கலெக்ஷன், ஆக்ஸிடைஸ்ட் கலெக்ஷன் என பழைய ட்ரெண்ட்தான் பிரபலமாக இருக்கிறது. ரொம்ப காலத்திற்கு பிறகு மீண்டும் இளம்பெண்கள் விசேஷ வீடுகளில் ஜிமிக்கியும், நெத்திச்சுட்டியும் அணிந்து வலம் வருவதை பார்க்க முடிகிறது.

காதில் கடுக்கண்

காதில் கடுக்கண்

அந்த காலத்து ஹேர் ஸ்டைலும் மீண்டும் இளசுகள் மத்தியில் பிரபலமாக உலா வர ஆரம்பித்துவிட்டது. குடுமி வைத்துக்கொண்டிருக்கும் எம்ஜிஆரை நாயகி கிண்டல் செய்யும் காட்சியை ஒரு பழைய படத்தில் பார்த்தேன். சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில், குடுமி வைத்த பையன்கள் சிலர், காதில் கடுக்கண் போட்டுக்கொண்டு டிஜே என்ற பெயரில் பல பாடல்களை ஒன்றுடன் ஒன்றைக் கலக்கி பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்க்கள்.

ரவுண்டு கண்ணாடி

ரவுண்டு கண்ணாடி

காந்தி தாத்தா கண்ணாடியை பார்த்திருக்கீங்களா.. நல்லா வட்டமா இருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூட அந்தமாதிரி ஒரு கண்ணாடியைத் தான் போட்டுகிட்டிருந்தார். அப்புறம் அந்த மாதிரி கண்ணாடி கொஞ்ச காலம் காணாம போயிடுச்சி. இப்போ பாருங்க, நம்ம நண்பர்களிலேயே நிறைய பேர் வட்ட கண்ணாடிக்கு மாறிட்டாங்க. ஹாய், இந்த கண்ணாடி பயங்கர ஸ்டைலா இருக்கு மச்சி என்று நாமே சொல்கிறோம். கண்ணாடிக்கு காசு கொடுக்கும்போது ரூபாய் நோட்டில் காந்தி போட்டிருக்கும் கண்ணாடியையும், உங்க புது கண்ணாடியையும் பக்கத்துல வெச்சி பார்த்திருந்தாலே உடனே புரிஞ்சிருக்கும்.

அதுவும் பழசுதான்

அதுவும் பழசுதான்

அது சரி, இன்னைக்கு யார் ரூபாய் நோட்டெல்லாம் கொடுத்து ஷாப்பிங் பண்றோம். டிபெட் கார்ட், கிரெடிட் கார்ட், பேடிஎம், கூகுள் பே இல்லேன்னா ஏதோ ஒரு ஈ வவுசர், ஷாப்பிங் கோடு இப்படி எக்கச்சக்க விஷயங்கள் வந்திடுச்சி. ஆனா இதெல்லாம் கூட ரொம்ப காலத்துக்கு முன்னாடியே இருந்த சிஸ்டம்தான்னு சொன்னா ஆச்சரியா இருக்கா? ஆமாங்க, நாணயம் கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி மக்கள் எப்படி பொருட்களை வாங்குனாங்க, எப்படி வியாபாரம் பண்ணாங்க.

ஆதிகாலத்து பண்ட மாற்று

ஆதிகாலத்து பண்ட மாற்று

ஆதிகாலத்தில் பண்ட மாற்று முறைதான் நடைமுறையில் இருந்தது. நம்மிடம் அதிகமா இருக்குற பொருளை கொடுத்து நமக்கு தேவையான பொருளை வாங்கிக்கணும். விவசாயி தன்னிடம் இருக்கும் நெல்லை கொடுத்து தனக்கு தேவையான ஆடு, மாடுகளை வாங்கிப்பார். ஆனால் இதுல ஒரு சிக்கல். எல்லா இடத்துக்கும் இந்த பொருட்களை தூக்கிட்டு அலையனும். அப்புறம் யாருக்கு எது தேவையோ அவர் கிட்டே அவருக்கு தேவையானதை தந்துதான் நமக்கு தேவையானதை வாங்க முடியும். இப்படி நிறைய இடியாப்ப சிக்கல்கள் இருந்ததாலதான், வணிகம் பண்ண பணம் என்ற ஒன்றையே மனிதன் கண்டுபிடித்தான்.

புதிதாக வந்த கரன்சி

புதிதாக வந்த கரன்சி

பிறகு அந்தந்த நாடுகள் வெளியிடும் பணத்தை மக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இப்போ அடிக்கடி செய்திகளில் நாம என்ன படிக்கிறோம்? இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சின்னு வருதே. அப்படின்னா என்ன? நம்ம நாட்டு ரூபாயை அமெரிக்க நாட்டு டாலரா மாத்துனா கிடைக்கிற தொகை இன்னும் கொஞ்சம் கம்மியா கிடைக்கும்னு அர்த்தம். ஆக, நம்ம நாட்டு ரூபாய் மதிப்புக்கு ஏற்ப நம்ம லாப, நஷ்டம் மாறும். இப்போ அடுத்தகட்டமா பிட்காயின் வந்திருச்சு. இது எந்த நாடும் வெளியிடாத இணைய பணம். எந்த தனியொரு நாடும் இதன் மதிப்பை தீர்மானிக்க முடியாது. அதுக்கான மதிப்பீடே வேற.
ஒரு வகையில் பிட்காயினும் பழைய பண்டமாற்று வணிகம் மாதிரிதான். எந்த நாட்டுக்கு போனாலும் இணையத்தில் இருக்கும் பிட்காயின் என்ற பொருளை கொடுத்து தேவையான பொருளை பெற்றுக்கொள்ளலாம். எந்த தனியொரு நாட்டு வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பணம்.

சேமிப்பு

சேமிப்பு

வங்கி செயல்பாடு எப்போ பிரபலாமாச்சு. ஒரு 50 வருஷமாத்தானே. அதுக்கு முன்னாடி நம்ம வீட்டு பெண்கள் சமையல் அறை அஞ்சறை பெட்டியிலும், பீரோவில் துணிக்கு அடியிலும் தானே தங்கள் சேமிப்பை வைத்திருந்தார்கள். பெரிய மனிதர்களின் வீட்டு இரும்பு பெட்டிக்குள் இருந்த பணம், ரொம்ப காலத்துக்கு பிறகுதானே வங்கி நடைமுறைகளுக்குள் வந்தது. இப்போ மீண்டும் பழைய முறை மெல்ல திரும்புது. ஆனால் என்ன? பணம் வீட்டில் இருப்பதற்கு பதில் ஏதோ ஒரு ஈ-வேலட்டில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வங்கிக்கு ஓடத் தேவையில்லை. மொபைலில் இருந்த இடத்தில் இருந்தே பணப்பரிமாற்றங்களை செய்துகொள்ள முடிகிறது.

வாழ்க்கையே ஒரு வட்டம்தான்

வாழ்க்கையே ஒரு வட்டம்தான்

கடந்த ஒரு நூறு வருஷத்தை புரட்டிப் பார்க்கும்போதே இவ்வளவு விஷயம் திரும்ப வந்திருப்பது தெரிகிறது. இன்னும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியில் வரும்போதுதான், நாம் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபேஷன் எதையாவது இப்போ லேட்டஸ்ட் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோமா என்பது தெரிய வரும்.

உண்மையிலேயே வாழ்க்கை ஒரு வட்டம்தான்.

- கௌதம்

English summary
As Vijay said in a movie, Llife is a circle boss. Live it and enjoy it well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X