மாணவர்களின் மனம் கவர்ந்த "ரமணனாக" இருப்பாரா இந்த பாலச்சந்திரன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மிக கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

  சென்னை : மழை மன்னன் என்று அழைக்கப்பட்ட ரமணனை போல் பாலச்சந்திரனும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியை கூறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

  கடந்த சில ஆண்டுகளாக என்னதான் செய்திகளில் மழை குறித்த தகவல்களை அப்போதைய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறிவந்தாலும் கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மாணவர்களின் மழைக் கடவுளாக மாறிவிட்டார்.

  எனவே அவரை தெரியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புயல் உருவானது குறித்து தகவல் தெரிவித்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு ஒரு காரணமாகிவிட்டார்.

  தானாக கொட்டும் மழை

  தானாக கொட்டும் மழை

  மழை என்பது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்யும். ஆனால் கடந்த 2015-ஆம் ஆண்டு மழையை ஏதோ ரமணன் பெய்ய வைத்தது போல் அவருக்கு கோயில் கட்டாத குறையாக மாணவர்கள் கொண்டாடினர். அவரை பாராட்டி மீம்ஸ்கள் வரிசை கட்டின.

  செய்தி சானல்கள்

  செய்தி சானல்கள்

  பொதுவாக ஒரு சில மாணவர்கள் மட்டுமே செய்தி சானல்களை பார்ப்பர். பெரும்பாலானோர் ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சேனல்களை மட்டுமே பார்ப்பர். ஆனால் அந்த 2015-ஆம் ஆண்டு ரமணனுக்காகவே செய்தி சேனல்களை மாணவர்கள் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஹீரோவாகவே வலம் வந்தார் ரமணன். அந்த ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்ததால் 15-க்கும் மேற்பட்ட நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

  சென்னை ஆட்சியரான ரமணன்

  பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிப்பது அந்தந்த மாவட்ட கலெக்டர்களாகத்தான் இருப்பர். ஆனால் அந்த 2015-ஆம் ஆண்டு ரமணனின் புயல் அறிவிப்பால் அவர்தான் சென்னை ஆட்சியர் என்றெல்லாம் மீம்ஸ்கள் ஓடத் தொடங்கின.

  ஓய்வு பெற்றார்

  ஓய்வு பெற்றார்

  மாணவர்களின் மனங்கவர்ந்த ரமணன் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பணியில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இது மாணவர்களின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. இதையடுத்து அப்பதவிக்கு பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  மாணவர்களின் மனங்களை கவருவாரா?

  மாணவர்களின் மனங்களை கவருவாரா?

  கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் ரமணனை போல் மாணவர்களின் மனதை பாலச்சந்திரனும் கவருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று பெய்த மழைக்கே பள்ளிக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

  மழை வெளுத்து வாங்குமா? இல்லை ஆஃப் ஆகிவிடுமா? என்பது போக போகத்தான் தெரியும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Now North east monsoon season starts today. The school and college students thinks that Balachandran will also says good news like Ramanan said in 2015 North East Monsoon.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற