புத்தாண்டில் குடித்து விட்டு கும்மாளம்.... தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ

  சென்னை: புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு தினத்தன்றும் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

  தமிழக நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் உள்ள மதுபான கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலையும் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

  Liquor sales in TN on the eve of New year increases

  பொதுவாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மது விற்பனை ரூ.211 கோடிக்கு நடைபெற்றது.

  கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ. 175 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியபோதும் ரூ.36 கோடி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Liquor sales in Tamilnadu increases this year by Rs. 36 crores when comapared with last year, though liquor price hike .

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற