உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் சென்னை.. ஆயுதப்படை போலீஸார் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவு!
சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை திடீரென கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

துணை ஆணையர்களுக்கு உத்தரவு
இந்நிலையில் சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர துணை ஆணையர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் ஆஜராக உத்தரவு
காவிரி மருத்துவமனைக்கு இணை ஆணையர் அன்பு வருகை தந்துள்ளார். அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் இருக்க உத்தரவு
சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்புகள் அமைப்பு
காவேரி மருத்துவமனையிலும் அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குவிந்து வரும் மக்களை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோபாலபுரத்திலும் குவிப்பு
இதேபோல் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெமினி மேம்பாலம் அருகே துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications