சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் 2-வது நாளாக தொடருகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- வீடியோ

  சென்னை: தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கல் லாரி உரிமையாளர்களின் போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் புதிய வாடகை டெண்டரை அறிவித்தன. அதன்படி டேங்கர் லாரிகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில்தான் டெண்டரில் பங்கேற்கும் நிலை உருவானது.

  LPG tanker truck owners strike continue

  இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய டெண்டரை வாபஸ் பெற வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கியுள்ளது.

  இப்போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. இதனால் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  South India LPG tanker truck owners continue their indefinite strike on Tuesday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற