For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக-காங். தேமுதிக கூட்டணி: விஜயகாந்துடன் ஜி.கே. வாசன் சந்திப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

LS poll: Vasan meets Vijayakanth
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிக இடையேயான கூட்டணி உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று இரவு சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே கிடையாது என்று அறிவித்தது திமுக. இதனால் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது திமுக. ஆனாலும் திமுகவில் அழகிரி, கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இருந்தனர்.

இதேபோல் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் தமிழகத்தில் வெற்றி கூட்டணி அமையும்.. அதுபற்றி ஓரிரு நாட்களில் முடிவு வெளியாகலாம்.. கூட்டணி தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று திரும்ப திரும்ப கூறி வந்தார்.

பிடிகொடுக்காத விஜயகாந்த்- பிரதமரை சந்திக்கிறார்

மேலும் பாஜக தரப்பும் தேமுதிகவை வளைக்க பகீர முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் விஜயகாந்த் பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில் திடீரென டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை விஜயகாந்த் சந்திக்க முடிவு செய்தார்.

மொய்லி அல்லது அந்தோணி சென்னை வருகை?

அத்துடன் காங்கிரஸ் மேலிட தலைவர்களான அந்தோணி அல்லது வீரப்ப மொய்லி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருவதாக கூறப்பட்டது. இதனால் திமுக- தேமுதிக- காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்பது உறுதியானது.

சோனியா- கனிமொழி சந்திப்பு

இதை உறுதிப்படுத்தும்விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி நேற்று சந்தித்து பேசினார்.

விஜயகாந்த்- வாசன் சந்திப்பு

இதேபோல் நேற்று இரவு விஜயகாந்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். விஜயகாந்துடனான ஆலோசனையின் போது டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் சந்திப்புகள் பற்றி இருவரும் விவாதித்திருக்கின்றனர்,

உறுதியானது கூட்டணி

அடுத்தடுத்த இந்த சந்திப்புகளால் திமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிக கூட்டணி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது என்றே கூறப்படுகிறது.

English summary
Congress leader and Union minister G. K. Vasan has met the actor turned politician Vijayakanth in Chennai on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X