நிர்மலா தேவி எந்த மேலிடத்திற்காக செய்த ஈனச்செயல் என சிபிஐ விசாரணை தேவை... ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போக செய்வதா?-வீடியோ

  சென்னை : பேராசிரியை நிர்மலா தேவி எந்த மேலிடத்திற்காக கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிகாட்டினார் என்று விசாரிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐயிடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  கல்லூரி மாணவிகள் 4 பேரை உயர் அதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  M.K.Stalin seeks CBI enquiry for Professor Nirmaladevis lure to college students

  இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில் : கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த "மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  M.K.Stalin seeks CBI enquiry for Professor Nirmaladevi's lure to college students and also urges immediate arrest of Nirmaladevi who misguided college students.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற