For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூதிகளுக்குள் ஷரியத் கோர்ட்டுகள் செயல்பட கூடாது- சென்னை ஹைகோர்ட் தடை

மசூதிகளுக்குள் ஷரியத் கோர்ட்டுகள் செயல்பட கூடாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலம் என்பது வழிபாட்டுக்கானது மட்டுமே என

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணா சாலையிலுள்ள மசூதியொன்றில், ஷரியா நீதிமன்றங்கள் இயங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுகுறித்து அப்துல் ரகுமான் என்ற வெளிநாடு வாழ் இந்தியர், சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கமான கோர்டுகளை போல இஸ்லாமிய பெரியவர்களை வைத்து இந்த கோர்ட்டுகள் இயங்குவதாகவும், குடும்ப நீதிமன்றங்கள் போல செயல்பட்டு விவாகரத்து விவகாரங்களில் முடிவெடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

Madras HC bans unauthorised Sharia courts in mosques

அப்பாவி இஸ்லாமிய பெண்களும், சில ஆண்களும் கூட இதனால் பாதிக்கப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த சென்னை ஹைகோர்ட், இதுபோன்ற கோர்ட்டுகள் செயல்பட கூடாது என உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலம் என்பது வழிபாட்டுக்கானது மட்டுமே என்றும் அது தனது உத்தரவில் கூறியுள்ளது.

English summary
The Madras high court on Monday banned all unauthorised Sharia courts functioning in mosque complexes in Tamil Nadu. The order was passed on a PIL filed by an NRI questioning illegal courts operating within mosques and passing orders on matrimonial issues including divorce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X