பெண் அதிகாரியிடம் ஜுஜுபி விஷயத்துக்காக சண்டை போட்ட மாஜி துணை மேயர் மிசா பாண்டியன் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை : கோவிலில் பெண் அதிகாரியுடன் சண்டையிட்ட காரணத்தால் மதுரை மாஜி துணை மேயர் மிசா. பாண்டியன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் மிசா பாண்டியன். முன்னாள் துணை மேயர். தி.மு.க.வில் மதுரை தெற்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். மிசா பாண்டியன் கடந்த 2-ந்தேதி பாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு சாமி கும்பிட டிக்கெட் எடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கோவில் ஊழியர் யாழினி, டிக்கெட் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்கு வாருங்கள் என்று சொன்னார்.

 Madurai Ex deputy Mayor Misa. Pandian arrested

இதனை ஏற்க மறுத்த மிசா பாண்டியன் வாக்குவதத்தில் ஈடுபட்டதோடு தகராறும் செய்து உள்ளார். இதனால் யாழினி கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தவிர்த்த குற்றம், பெண் கொடுமை, கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் மிசா பாண்டியன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai Ex deputy Mayor Misa. Pandiyan got arrested because of took fight for a filthy reason with the women officer at Pandu Koil, under the complaint of her he took into Prison by Magistrate order.
Please Wait while comments are loading...