எனக்கு எதிராக முன்னாள் ஊழியர்கள் சதி.. மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தமக்கு எதிராக தம்மை பதவியில் இருந்து நீக்க முன்னாள் ஊழியர்கள் சதி செய்வதாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

செல்லதுரையின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அந்தோணிராஜ் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, செல்லதுரையை நியமிக்க தங்களுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதாக துணைவேந்தர் தேர்வு குழு உறுப்பினர்களான ஹரீஷ் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்து அதிர்வலைகளள ஏற்படுத்தினர்.

Madurai Kamaraj University VC defends his stand

இந்நிலையில் துணைவேந்தர் செல்லதுரை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, தமக்கு எதிராக தம்மை பதவியில் இருந்து நீக்க முன்னாள் ஊழியர்கள் பெரும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர் என விளக்கம் அளித்தார்.

மேலும் வேடசந்தூர், திருமங்கலம், கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகள் இன்னும் 10 நாட்களில் முதல்வர் எடப்பாடியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்படும் எனவும் செல்லதுரை கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madurai Kamaraj University Vice Chancellor Chellathurai defended his appointment.
Please Wait while comments are loading...