For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐந்தரை பவுன் நகைக்காக எஜமானியை கொலை செய்த வீட்டு வேலை செய்த பெண்.. விசாரணையில் பகீர்!

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சாவூரில் நகைக்காக வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் அந்த வீட்டு உரிமையாளரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சேக்சிலார் தெருவை சேர்ந்த ஆண்டனி ஜோர்டன் மனைவி ஜாக்குலின் (65). இவர் கடந்த15-ஆம் தேதி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இவரது மகன் பிராங்கிள் மதுரை ரயில்வே துறையில் டி.டி.ஆர் .ஆக வேலை பார்க்கிறார். 15ஆம் தேதி இரவு பிராங்கிளின் அவரது தாயாருக்கு போன் செய்து உள்ளார்.

தீரன் பட பாணியில்.. கணவன், மனைவியை கட்டி போட்டு.. சென்னை புறநகரில் பயங்கர கொலை! தீரன் பட பாணியில்.. கணவன், மனைவியை கட்டி போட்டு.. சென்னை புறநகரில் பயங்கர கொலை!

தாயார்

தாயார்

நீண்ட நேரம் போன் அடித்தும் தாயார் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் உடனே மதுரையிலிருந்து கிளம்பி தஞ்சைக்கு வந்து அவரது வீட்டை திறந்து பார்த்தபோது நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஜாக்குலின் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்து உள்ளார்.

ஐந்தரை பவுன் செயின்

ஐந்தரை பவுன் செயின்

அவர் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் சங்கிலி, கையில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டு, செல்போன் ஆகியவையும் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் பிராங்கிளின் புகார் கொடுத்துள்ளார்.

டெய்சி

டெய்சி

இது குறித்து போலீசார் கொலையா என விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜாக்குலின் வீட்டில் வேலை பார்த்து வந்த மானேஜிப்பட்டி தியாகராஜநகரை சேர்ந்த யோகா விக்டர் மனைவி டெய்சி (35) என்பவர் நகைக்கும் செல்போனுக்காகவும் கொலை செய்தது தெரிய வந்தது.

செல்போன்

செல்போன்

அவரிடம் இருந்த ஒரு செயின் செல்போனை மீட்டு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் ஜாக்குலினின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் சங்கிலியை பறிக்க டெய்சி நினைத்துள்ளார். இதனால் அவர் தூங்கும் போது நைசாக கழற்றியுள்ளார். ஆனால் ஜாக்குலின் விழித்துக் கொண்டார்.

ஜாக்குலின் கொலை

ஜாக்குலின் கொலை

"நீ கேட்கும் போதெல்லாம் உன் குடும்ப கஷ்டத்திற்காக பணம் கொடுத்தேன். இப்போது என் கழுத்திலிருந்து நகையையே பறிக்கிறாயா" என ஜாக்குலின் எதிர்த்துள்ளார். அப்போது டெய்சி அவரது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அடிக்கடி வலிப்பு நோய் வருவதை அறிந்த டெய்சி இந்த கொலையையும் வலிப்பு நோயால் இறந்தது போல் காட்ட அவரை நாற்காலியில் அமரவைத்துவிட்டு சென்றுவிட்டார்.

English summary
Maid murdered 65 years old woman and steal her jewels in Tanjore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X