ஐரோப்பாவில் படமாக்கப்பட்டமெர்சல் மேஜிக் ஷோ மேக்கிங் வீடியோ.. ப்பா படுபயங்கரமா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் மிகப் பிரம்மாண்டமாக செய்து காட்டும் மேஜிக் ஷோவின் மேக்கிங் காட்சிகளை தேனான்டாள் பிலிம்ஸ்ன் சிஇஓ ஹேமா ருக்மணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வசூலில் வாரிக்குவித்துள்ள நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தின் மேக்கிங் காட்சியை தேனான்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் இயக்குனரும், தேனான்டாள் என்டர்டெயின்மெண்ட்டின் சிஇஓவுமான ஹேமா ருக்மணி தன்னடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தம்பி விஜய் அயல்நாட்டில் மேஜிக் ஷோ ஒன்றில் வைத்து வில்லன் மருத்துவரை கொல்லும் காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பதே அந்த மேக்கிங் வீடியோ.

 Making of Vijay's famous magic show at Mersal film hits twiter handle

வில்லனை கொல்வதற்கு முன்னர் விஜய் சில மேஜிக்குகளை செய்து அசத்துவார். ஐரோப்பாவில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமில்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நடிகர் விஜய் எப்படி மேஜிக் செய்தார், ஆடியன்ஸ் ரியாக்ஷன் காட்சிகளை இயக்குநர் அட்லி மெர்சல் குழுவினருடன் இணைந்து படமாக்கயிது என்று அனைத்தும் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது.

விஜய் செய்யும் மேஜிக் காட்சிகள் எப்படி படத்தில் கண்களை அகலவிரித்து பார்க்க வைத்ததோ, அதே போன்று இந்த மேக்கிங் வீடியோவும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவே அமைந்துள்ளது. டுவிட்டரில் இந்த மேக்கிங் வீடியோ வெளியான இரண்டு மணி நேரத்தில் ஆயிரத்து 500 ஷேர்களையும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thenandal entertainment CEO Hema Rukhmani released the making video of Mersal Vijay's magic show which was shot at Europe making video and this hits mass welcome at twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற