For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை முகப்பேரில் துண்டு துண்டாக வெட்டி உடலுறுப்புகளை வீசியவர் கைது... பரபர பின்னணி

சென்னை முகப்பேரில் துண்டு துண்டாக வெட்டி உடல் உறுப்புகளை வீசிய இறைச்சிக் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை முகப்பேரில் துண்டு துண்டாக வெட்டி உடல்உறுப்புகளை கால்வாயில் வீசிய வழக்கில் கொலையாளி போலீஸார் கைது செய்தனர். கொலையுண்டவரின் அடையாளமும் தெரிந்தது.

முகப்பேர் மேற்கு பகுதி வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம்
கடந்த 27-ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற துப்புரவு பணியாளர்கள், அங்கு கிடந்த கோணிப்பையை இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட முயன்றுள்ளனர். அப்போது கோணிப்பையில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்த போது, பையிலிருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் உடல் பாகங்கள் கீழே விழுந்தது.

 பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

இதனால் அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 போலீஸ் தீவிர விசாரணை

போலீஸ் தீவிர விசாரணை

உடல் பாகங்களில் தலை இல்லாத காரணத்தினால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. உடலின் தலை பாகத்தை நொளம்பூர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலையுண்டவர் டைலர் பாபு என தெரியவந்தது.

 முகமது ரசூல் கைது

முகமது ரசூல் கைது

இதைத் தொடர்ந்து இறைச்சி கடை ஊழியர் முகமது ரசூலை கைது போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாபுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

 கொலையை மறைக்க சதி

கொலையை மறைக்க சதி

மது குடித்துக் கொண்டிருந்தபோது கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அதனை மறைக்கவே உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.

English summary
The mutilated body was found near Mogappair canal was indentified as Tailor Babu and the Nolumbur Police arrested the accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X