For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மாருதா"வால் சாய்ந்த 10,000 வாழை மரங்கள்... பதைபதைப்பில் விவசாயிகள்! - வீடியோ

வங்கக் கடலில் உருவான மாருதா புயலால், ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் பலத்த புயல் காற்று வீசியுள்ளது. அந்த புயலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து, 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளத

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 'மாருதா' புயலால் பல ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் தமிழகத்தின் உட்புறத்தில் உள்ள சில மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது. அந்த புயலுக்கு 'மாருதா புயல்' என பெயரிட்டது வானிலை மையம்.

Marudhaa cyclone affects Erode Sathyamangalam

இந்த மாருதா புயலால் ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் புயலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமடைந்தது.

ஒவ்வொரு வாழைத்தாரின் விலையும் 500-600 ரூபாய் வரை விற்பனையாகும் என்னும் நிலையில், 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயலால், சென்னையில் 30,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Marudha cyclone hit at Erode Sathyamangalam. Near by villages and plantation crops which was planted in hundreds of acres affected and farmers lost almost 50 lakh rupees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X