கருணாநிதி கவலைக்கிடம்: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை அளித்த போதும் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு
இதனால் கருணாநிதியின் குடும்பத்தினரும் தொண்டர்களும் பெரும் வேதனை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து சேவை ரத்து
இதனிடையே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்
இதேபோல் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications