For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிமுகவினர் ரத்ததானம்: வைகோ தொடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கலிங்கபட்டி: மது ஒழிப்பு விழிப்புணர்வுக்காவும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சாலால் அவதிப்படும் ஏழை எளியோருக்கு ரத்தம் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியும் கலிங்கப்பட்டி மாணவர் அணி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மறுமலர்ச்சி இரத்ததானக் கழகத்தின் தலைவரும், கழகப் பொதுச்செயலாளருமான வைகோ இரத்ததான முகாமினைத் தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

MDMK cadre donate blood

விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களை டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்கி உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நிவாரணம் இரத்தம் செலுத்துவதுதான். ஆகவே தென்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்படும் ஏழை நோயாளிகளுக்கு இரத்தம் வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

MDMK cadre donate blood

இந்த இரத்ததான முகாமில் சேகரிக்கப்டும் இரத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த முகாமில் 10 மாணவியர் உட்பட 160 பேர் இரத்தானம் வழங்கினார்கள்.சங்கரன்கோவில் அரசு பொதுமருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் சுகுந்த குமாரி தலைமையிலான குழுவினர் இரத்தம் சேகரித்தனர்.

கலிங்கப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் வை.இரவிச்சந்திரன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், ஜோதிராஜ், இளங்குமரன், மாரிமுத்து, முத்துராஜ் ஆகியோர் இரத்ததான முகாமினை ஒருங்கிணைத்தனர்.

English summary
The Marumalarchi Blood Donors' Club will organize a series of special camps here to ensure adequate supply of blood and blood components to save the dengue patients, Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko, has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X