வைகோ டெல்லிக்கு போனாலும் போனார்.. ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்களே.. ஆனால் இதை வைகோவே ரசிப்பார்!
வைகோவின் கன்னி பேச்சு குறித்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்
Recommended Video
சென்னை: வைகோ டெல்லிக்கு போனாலும் போனார்.. நம் ஆட்கள் அவரை உச்சியில் வைத்து பாராட்டி வருகிறார்கள். அதே சமயம் அவரது பேச்சையும் ட்விட்டர்வாசிகள் விட்டு வைக்காமல் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
40 வருஷத்துக்கு மேல் அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி வைகோ ஆவார். மிகச்சிறந்த ஞானம் உடையவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்பியாக இருந்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்.
ராஜ்யசபா, லோக்சபா என இந்த இரண்டிலுமே வைகோவின் ஆங்கில உரையை கேட்க நிறைய எம்பிக்கள் ஆர்வமாக இருப்பார்கள். இதில் எந்தவித கட்சி பாகுபாடும் இருக்காது. பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி காரசார விவாதத்தில் ஈடுபடுவார் வைகோ.

ராஜீவ் காந்தி
நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று இன்றுதான் அர்னாப் கதறுகிறார்.. ஆனால் "கிவ் ஆன்ஸர் டு மை கொஸ்டின்.." என, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியையே கேள்விகளால் துளைத்தெடுத்தவர் வைகோ என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ராஜீவ் காந்தி மட்டும் கிடையாது.. எந்தத் தலைவரும் அவருடைய கேள்விகளிலிருந்து தப்ப முடியாது. லெப்ட் & ரைட் வாங்கிவிடுவார்.

டைகர்
அதனால்தான் வைகோவை அன்று 'டைகர் ஆப் பார்லிமென்ட்' என கட்சி தலைவர்கள் அழைத்தார்கள். (இன்று இந்த பட்டம் கனிமொழிக்கு சென்றுவிட்டது வேறு விஷயம்) இப்போது இது விஷயம் இல்லை.. 22 வருஷம் கழித்து எம்பியாக போன வைகோ, தன்னுடைய முதல் பேச்சிலேயே அவையை அதிர வைத்தார்.

கைதட்டினார்
இவர் பேச ஆரம்பிக்கும்போதே ராஜ்ய சபாவில் இருந்த பிரதமர் மோடி கை தட்டினார். ஆனால் வைகோ பேசி முடித்ததும் கை தட்டினாரா என்பது நமக்கு தெரியாது.. ஏனென்றால் நான்-ஸ்டாப் பேச்சுதான் வைகோவின் பேச்சாக இருந்தது.

அடைமழை
"பேச ஆரம்பிச்சார்.. பேச ஆரம்பிச்சார்.. சென்னை ஏர்போர்ட் வரை பேசிட்டே இருந்தாரு"னு அசின் கஜினி படத்துல சொல்லுவாரே.. அந்த மாதிரி இருந்தது வைகோவின் (கன்னி!!) பேச்சு.. நிறுத்தாமலேயே அதகளப்படுத்தி கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்துக்கு பிறகுதான் மழை பெய்துவிட்ட மாதிரி இருந்தது.

மீம்ஸ்கள்
நம்ம ஆட்களுக்கு கலாய்க்க இது போதாதா என்ன? உடனே வைகோவின் பேச்சை இணையத்தில் போட்டு.. அதில் மீம்ஸ்களை கொஞ்சம் கலக்கிவிட்டு, ட்வீட்களையும் சேர்த்து குழைத்து அடித்து... வைரலாக்கி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் வைகோ பேசிய நான் ஸ்டாப் காட்சியை எடுத்து அதில் எஸ்பிபி மூச்சு விடாமல் பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாட்டை மிக்ஸ் செய்து தத்ரூபமாக கலாய்த்துள்ளனர். செம வைரலாகியுள்ளது இந்த வீடியோ.
-
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications