For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

ராஜிவ் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

evks elangovan

ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மூவரையும் விடுதலை செய்த 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான தீர்ப்பு. பேரறிவாளன் மட்டும் பேட்டரி வாங்கிக் கொடுத்தார்; மற்றபடி அவருக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். அதனை விசாரித்த அதிகாரியே அதைத்தான் இப்போது சொல்லியிருக்கிறார். அதனால், பேரறிவாளனை மட்டும் தண்டனை இல்லாமல் செய்தால், அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், முருகன், சாந்தன் இருவரும் ராஜீவ் காந்தி கொலை செயல் நடக்கும் அந்த ஸ்பாட்டில் இருந்தவர்கள். இவர்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்று சொல்வது, நீதித் துறை மீதே நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய செயல். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தால்தான் நீதி நிலைக்கும் என்று கூறியுள்ளார்.

English summary
Former TNCC president E.V.K.S. Elangovan said an inquiry into the claim that Perarivalan had no knowledge of the plan to kill Rajiv Gandhi and he only purchased a battery without knowing the designs of the LTTE. But the death sentence of Murugan and Santhan who oversaw the murder should not be commuted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X