தேரை இழுத்து தெருவில் விட்ட தமிழிசை, எச்.ராஜா.. தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் தலைவலி #modivsmersal

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தேரை இழுத்து தெருவில் விட்ட தமிழிசை, எச்.ராஜா..-வீடியோ

    சென்னை: எச்.ராஜா, தமிழிசை சவுந்தராஜன் போன்றோரின் புண்ணியத்தால், பிரதமர் மோடியும், பாஜகவும் தேசிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    மெர்சல் படத்தில் இடம் பெற்ற காட்சிகளை நீக்குமாறு தமிழிசை ஆரம்பிக்க, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பிற பாஜக தலைவர்கள் அதை வழிமொழிய, இந்த பிரச்சினை இப்போது தேசிய அளவுக்கு போய்விட்டது.

    டைம்ஸ்நவ், என்டிடிவி, நியூஸ்எக்ஸ் என அத்தனை முன்னணி ஆங்கில டிவி சேனல்களும் நேற்று மெர்சல் பற்றிதான் விவாதம் நடத்தின.

    தேசிய அளவில் டிரெண்ட்

    MersalvVSModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. மோடிக்கு எதிராக மெர்சல் என்பதுதான் இதன் பொருள். வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளுக்குதான் இதுபோன்ற ஒரு ஹேஷ்டேக் போடப்படும். ஆனால், தமிழ் திரைப்படம் ஒன்று மோடிக்கு எதிராக பேசுவதாக vs குறியீட்டுடன், தேசிய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது இதுதான் முதல் முறை.

    தமிழக மனநிலை

    தமிழக மனநிலை

    பல லட்சம் ரசிகர்களை கொண்டவரும், குழந்தைகள், இளம் பெண்களை கவர்ந்தவருமான தமிழின் முன்னணி நடிகர் ஒருவரே மோடிக்கு எதிராகத்தான் உள்ளார். இது தமிழகத்தின் மனநிலையை காட்டுகிறது என்ற செய்தி தேசம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.

    பாஜகவுக்கு தலைவலி

    பாஜகவுக்கு தலைவலி

    இந்த தகவல் என்பது பிற மாநிலங்களிலும் மோடிக்கு எதிராக கலையுலகை சிந்திக்க தூண்டும் வாய்ப்புள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை பேசு பொருளாக மாற்றியுள்ளது பாஜகவுக்குதான் பாதகமாக முடியும் வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் காரணம், 'சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த' தமிழக பாஜக தலைவர்கள்தான்.

    தப்பாவே இருக்கட்டுமே

    மெர்சலில் தப்பான புள்ளி விவரங்கள் உள்ளது எங்களுக்கும் தெரியும். ஆனால் அது பாஜகவை தாக்கும் படம் என்பதால் நாங்கள் ஆதரிப்போம்.

    பாஜகவுக்கு வேட்டுதான்

    பாஜகவுக்கு இனி எல்லா பக்கமும் வேட்டுதான் என்று கூறும் இந்த டிவிட், கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன்2 படம்தான் அடுத்த வேட்டு என்பதை போன்ற மீமுடன் வெளியிடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+