For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமிஷனுக்காக பால் முகவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர்!

கமிஷனுக்காக பால் முகவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கமிஷனுக்காக பால் முகவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தை கலப்பதால் தான் பால் கெட்டுப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜேந்திர நேற்று முன்தினம் திருவள்ளூரில் ஆவின் பால் பண்ணை கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது, அது உடல் நலத்துக்கு நல்லது இல்லை என்றார்.

இதற்கு எதிப்பு எழும்பவே விளக்கமளித்த ராஜேந்திர பாலாஜி,

தனியார் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து ஆய்வு செய்ய புனேவுக்கு தனியார் பால் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்

ஆரோக்கியா மறுப்பு

ஆரோக்கியா மறுப்பு

அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஆரோக்கியா நிறுவனம் பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை என மறுப்புத் தெரிவித்தது.

நல்ல பால் இல்லை

நல்ல பால் இல்லை

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எல்லா தனியார் பாலும் நல்ல பால் இல்லை என அவர் கூறினார்.

நிரூபிக்க முடியுமா?

நிரூபிக்க முடியுமா?

கெட்டுப் போனால் தான் பால், கெடாமல் இருந்தால் அது ரசாயனம், என்று கூறிய அமைச்சர், தனியார் பால் நிறுவனங்கள் சமூக ஆர்வலர்களை தங்கள் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று நல்ல பால் தான் என நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.

தனியார் பாலுக்கு எச்சரிக்கை

தனியார் பாலுக்கு எச்சரிக்கை

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ரகசிய ஆய்வு

ரகசிய ஆய்வு

பெருவாரியான பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலந்துதான் விற்பனை செய்வதாகவும் அவர் தீர்க்கமாக கூறினார்.தனியார் நிறுவன பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து ரகசிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியாக நடவடிக்கை

சட்ட ரீதியாக நடவடிக்கை

தனியார் பால் நிறுவனங்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். பால் தட்டுப்பாடு என்பதால் கலப்பட பாலை குடிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விஷத்தை குடிக்கலாமா?

விஷத்தை குடிக்கலாமா?

கமிஷனுக்காக பால் முகவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பால் பற்றாக்குறை என்பதற்காக விஷத்தை குடிக்கலாமா என்றும் ராஜேந்தி பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.

English summary
Minister Rajedra balaji accuses that Milk agents are playing with people life. The private milk companies are mixing chemical in the milk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X