பாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்யுங்கள்- அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்- வீடியோ

  சென்னை: பாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியிருந்தார்.

  காஷ்மீரில் 8 வயது சிறுமி மிகக் கொடூரமான வகையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்த நிலையில் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியை விருதுநகரில் அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் தமிழக பெற்றோர் மனதில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் இருந்தது.

  Minister Jayakumar says that encounter those who involve in sexual assault

  இந்த ஆசிரியையை கைது செய்ய கோரி கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

  இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும். மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன்.

  பேராசிரியர் நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று தேசத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும். அமைச்சர் பொறுப்பிருக்கும் பொன். ராதா பொறுப்புடன் பேச வேண்டும். தெருவில் செல்பவர் போல் பேசக் கூடாது.

  அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டார். ஜெயலலிதா மரண விவகாரத்தில் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Jayakumar says encounter should be done those who are involve in Sexually assualt on Children and women.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற