சென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 பஸ் பாஸ் தொடரும்... அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 பஸ் பாஸ் தொடரும்-வீடியோ

  சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கடந்த 19-ஆம் தேதி 60 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. பேருந்து கட்டணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில் இது மக்களுக்கான பஸ், எனவே நஷ்டத்தை மக்கள்தான் சரி செய்ய வேண்டும் என்றார்.

  Minister M.R. Vijayabaskar says that Rs. 1000 bus pass will continue

  இந்நிலையில் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,000 ஆக இருக்கும் மாதாந்திர பாஸ் ரூ. 1,300 ஆக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. மேலும் ஒரு நாள் பயணம் செய்வதற்கான பாஸ் (ஒன் டே பாஸ்) ரூ. 50ல் இருந்து ரூ. 80 ஆக உயர்த்தப்படுவதாகவும் தகவல்கள் வந்தன.

  இந்த புதிய பாஸ்களை வரும் 14ம் தேதி முதல் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸ் கட்டண உயர்வு சென்னைவாசிகளை கொதிப்படைய செய்தது. பெரும் அதிருப்தி நிலவிய நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ரூ.1000 கட்டணத்திலேயே பஸ் பாஸ் வழங்கப்படும். ரூ. 50 பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் மானிய ஸ்கூட்டர் வாங்க கடந்த 5 நாட்களில் இதுவரை 1.16 லட்சம் பேர் எல்எல்ஆர் பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து துறையை நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Transport Minister M.R.Vijayabaskar says that Rs. 1000 bus pass will continue. The government is considering to increase the one day Rs. 50 pass, he adds.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற