தினகரன் அணிக்கு மாறத்தயாராகும் அமைச்சர்கள்... சோனமுத்தா ஒர்க் அவுட் ஆகுதா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தினகரனுக்கு சாதகமாக வந்துள்ளதை அடுத்து அமைச்சர்கள் சிலர் தினகரன் பக்கம் மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் தொடங்கி ஒவ்வொரு சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னணியில் இருந்தார்.
ஆர்.கே.நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது. யாராலும் நெருக்கடி தர முடியாது என்று செல்லூர் ராஜூ கூறினாலும் மைன்ட் வாய்ஸ் நெருக்கடிதான் என்று சொன்னது அனைவருக்குமே கேட்டது. அனைவரும் ஓரணியில் இணைவீர்களா என்று கேட்டதற்கு எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றார் செல்லூரார்.

மதுரையில் தினகரன்
மாபெரும் வெற்றியைத் தந்திருக்கும் ஆர்.கே. நகர் மக்களுக்கு மீனாட்சி கோயிலுள்ள மதுரையில் இருந்து நன்றி சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார் தினகரன்.

சின்னம் முக்கியமில்லை
சின்னம், கட்சியின் பெயர் யாரிடம் இருக்கிறது என்பது தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். அதுவே, தேர்தல் வெற்றியை நிர்ணயித்துள்ளது.
நான் சுயேட்சை வேட்பாளர் இல்லை நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் கூறினார் டிடிவி தினகரன்.

சைலண்ட் மோடில் அமைச்சர்கள்
தமிழகத்தில் அதிமுக அரசு இன்னும் மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும் என டிடிவி தினகரன் கூறினார்.
காலையில் ஒவ்வொரு சுற்றாக முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிமுக அமைச்சர்கள் பலர் சைலண்ட் மோடுக்கு போய் விட்டார்களாம்.

அணி மாற தயாராகும் அமைச்சர்கள்
எம்ஜிஆர் நினைவு நாளான இன்று அவரது ஆசி தனக்கு கிடைத்துள்ளது என்று தினகரன் கூறவே, வருங்கால புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாழ்க என்று உற்சாகமாக கூவினார் ஒரு தொண்டர். இன்று மாலை ரிசல்ட் வந்த உடன் 4 அமைச்சர்கள் டிடிவி தினகரன் சந்திக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டம் ஆரம்பம்
தினகரன் ஜெயிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களை விட அதிகம் ஆசைப்பட்டது எதிர்கட்சியினரும் ஸ்லீப்பர் செல்களும்தானாம். சோனாமுத்தா நினைச்ச மாதிரி நடந்திருச்சா... நீங்க நடத்துங்க ராஜா...சட்டசபையில் இனி தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆட்டத்தை நினைத்தால்தான் பயந்து வருதுப்பே... என்று சிலர் கதறுவது காதில் விழுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications