கருணாநிதி- மோடி சந்திப்பு... வெளிநாட்டில் இருந்து அவசரமாக சென்னை திரும்பிய ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்திப்பது ஏன்? பரபர பின்னணி- வீடியோ

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்கப் போகிறார் என்கிற தகவல் கிடைத்த நிலையில் வெளிநாட்டில் இருந்து விரைந்து சென்னை திரும்பினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை வருகை தந்த பிரதமர் மோடி கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MK Stalin returns from Sharjah

அண்மையில் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலான அணியை ஸ்டாலின் உருவாக்கி இருந்தார். தொடர்ந்து மத்திய அரசை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியை ஸ்டாலின் வரவேற்றார்.

முன்னதாக ஸ்டாலின் ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ஷார்ஜாவின் அரசு பிரதிநிதியாக சென்றிருந்தார் ஸ்டாலின். கருணாநிதியை மோடி சந்திக்கும் தகவல் கிடைத்ததும் அவசரமாக வெளிநாட்டில் இருந்து ஸ்டாலின் இன்று திரும்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K. Stalin return to Chennai from Sharjah on Monday.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற