அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை மீது செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை தடையாக இருப்பதாக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.

MLA Senthil Balaji compliants about Vijayabhaskar, Thambidurai

மேலும் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளை துவங்க வலியுறுத்தி வரும் 24ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி கருர் ஆய்வாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் சேர்ந்து செந்தில் பாலாஜியை ஒதுக்கி வருவதாக செய்திகள் எழுந்த நிலையில் அவர் புகார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பெயரில் புதிய கட்சி மற்றும் தொலைக்காட்சி சேனலை துவங்க செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் டாக்டர் நமது புரட்சித்தலைவி என்ற பெயரில் நாளிழ் துவங்கவும் செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLA Senthil Balaji has accused minister Vijayabhaskar and Thambidurai of plotting against the construction of Government medical college hospital in Karur.
Please Wait while comments are loading...