பரனூர் டோல்கேட்டில் கட்டணம் இன்றி அனுமதி! திடீரென குவிந்த மமகவினர்.. திணறிய சுங்கச்சாவடிகள்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

toll gate tamil nadu jawahirullah

பல சுங்கச் சாவடிகள் அதன் தவணை காலம் காலாவதி ஆன பின்பும் கூட தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன. காலாவதி ஆன பிறகும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள டோல்கேட்கள் காலாவதி ஆன நிலையிலும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அண்மையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவே கூறி இருந்தார்

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் நாள்தோறும் ரூபாய் 50 கோடி சுங்க கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும். ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி தமிழக மக்களுடைய பணம் சுங்கச் சாவடிகளில் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

toll gate tamil nadu jawahirullah

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜவாஹிருல்லா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தப் போராட்டம் காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பிவருகின்றனர்.

காலாவதியான செங்கல்பட்டு பரனூர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உடனடியாக மூடப்பட வேண்டும். கேரளாவின் அளவுகோலைப் பயன்படுத்தி 9 சுங்கச் சாவடிகளைத் தவிர மற்ற அனைத்துச் சாவடிகளும் மூடப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முற்றுகை போராட்டம் காரணமாக கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி துவாக்குடி டோல்கேட்டில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துவாக்குடி டோல்கேட்டில் உள்ள கண்ணாடிகள், கேமராக்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதேபோல், பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கவுண்டர்கள் கண்ணாடி போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளது. 3 கவுண்டர்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+