மிரட்டும் நாடா புயல்: சென்னை, கடலூர் உள்பட 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடா புயல் தமிழகத்தை நெருங்கியுள்ள நிலையில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்ட நாடா புயல் சென்னையை நெருங்கி வந்துள்ளது. புயல் சென்னை, வேதாரண்யம் இடையே நாளை கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Nada cyclone: Schools in 8 TN distrocts closed

கனமழையுடன் பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்க நெருங்க சென்னையில் மழையின் வேகம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிர்கொள்ள தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புர மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
8 district schools have been closed as Nada cyclone is approaching Chennai.
Please Wait while comments are loading...