For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதியுங்கள் - சிறைத்துறைக்கு நளினி மனு

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் உள்ள நளினி சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர் : சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் உள்ள நளினி சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார்.

கணவர் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத்துறையிடம் மனு அளித்தார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நளினியை முருகன் சந்தித்து வந்தார்.

முருகன் ஜீவ சமாதி

முருகன் ஜீவ சமாதி

இந்நிலையில் ஜீவசமாதி அடைவதற்காக முருகன் கடந்த 18ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சிறை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

தொடர் உண்ணாவிரதம்

தொடர் உண்ணாவிரதம்

ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதிக்கு அனுமதி வேண்டும் என்று கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி, அவரது உண்ணாவிரத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நளினி உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.

நளினி உண்ணாவிரதம்

நளினி உண்ணாவிரதம்

கணவரை சந்திக்க விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற கோரி வரும் நளினியும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். முருகன், தன் உண்ணாவிரதத்தை கைவிடும் வரை நளினியும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்வார் என்று அவர வழக்கறிஞர் கூறினார்.

நளினி மனு

நளினி மனு

கணவர் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று நளினி சிறைத்துறைக்கு எழுதியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார். முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத்துறையிடம் மனு அளித்தார்.

பரபரப்பு

பரபரப்பு

பேரறிவாளன் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் நிலையில், முருகன் மற்றும் நளினி ஆகியோர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Nalini has written letter to permit Hunger strike demanding to get back the her husband Murugan's strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X