நாமக்கல் தான் டாப்! சொத்து வரி வசூலில் தமிழ்நாட்டின் 24 மாநகராட்சிகளில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்து வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தான் நாமக்கல் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது சொத்து வரி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது.
மாநகராட்சிக்கு சொத்து வரி முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதன் வசூலை அதிகரிக்க தீவிர முயற்சியில் உள்ளனர். சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் அவ்வப்போது சொத்து வரி செலுத்துவதற்கு சலுகைகளையும் அறிவித்து, சொத்து வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் 24 மாநகராட்சிகளில் கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் சொத்து வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் 2024-2025 ஆம் நிதியாண்டில் நாமக்கல் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது.
நாமக்கல் நகராட்சியுடன் 12 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 12.08.2024 முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நாமக்கல் மாநகராட்சியில் 58,795 செத்துவரி விதிப்புகள் உள்ளது. நாமக்கல் மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி வசூலில் தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் இந்த மாநகராட்சி 22ஆம் இடத்தில் இருந்தது.
பின்பு சொத்துவரி வசூலில் படிப்படியாக முன்னேற்றம் செலுத்தி கடந்த நவம்பர்-2024 முதல் நடப்பு நிதியாண்டின் இறுதி வரை (31.03.2025) மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. மேலும், 15வது மத்திய நிதிக்குழு மானிய தொகையினை விடுவிக்க இம்மாநகராட்சிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட சொத்து வரி வசூல் இலக்கு ரூ.14.74 கோடியினை கடந்த 11.03.2025 அன்று அடைந்து நாமக்கல் மாநகராட்சி நடப்பாண்டிற்கான மத்திய நிதிக்குழு மானியத் தொகை பெற தகுதியான மாநகராட்சியாக உள்ளது. கடந்த ஆண்டு மேற்கண்ட இலக்கினை அடைய இயலாததால் 15வது மத்திய நிதிக்குழு மானியத் தொகையினை பெற இயலவில்லை.
சொத்துவரி தவிர்த்து பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான வசூலிலும் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. மேலும், மேற்கண்ட இனங்களுடன் குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, திடக்கழிவு சேவை கட்டணம் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கான மொத்த வசூலில் (Overall Collection) 2024-2025ஆம் நிதியாண்டில் நாமக்கல் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது.
மேற்கண்ட இலக்கினை அடைய உதவிய மாநகர பொது மக்களுக்கும், மேயர் மற்றும் துணை மேயர் அவர்களுக்கும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், அனைத்து மாநகர அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்ப்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் சமர்ப்பித்துக் கொள்கிறோம் என்று நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications