நந்தினி சீரியல்... சின்னத்திரையின் பிரம்மாண்ட சினிமா - விஜயகுமார் பெருமிதம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நந்தினி சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சினிமா என அதன் இயக்குநர் ராஜ் கபூர், நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரமாண்ட சீரியலான நந்தினி 100ஆவது எபிசோடை தொடவுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலை இயக்குநர் சுந்தர் சி.யின் ‛அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம், முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் கொடுக்கிறது. இந்த சீரியலில் மெகா நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.

Nandhini serial going to touch 100th episode very soon

இந்த சீரியல் 100ஆவது எபிசோடை தொடவுள்ளது. இந்த நிலையில் சீரியலில் இயக்குநர் ராஜ் கபூர் இதுகுறித்து கூறுகையில், இந்த சீரியல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பெரிய சினிமா என கூறினார். மேலும் இன்னும் சில எபிசோடுகளில் குஷ்பு என்ட்ரி கொடுப்பார் என ராஜ் கபூர் கூறினார். நடிகர் விஜயகுமார் தான் இந்த சீரியலின் கதாநாயகன். ஏனென்றால் கதை அவரைச் சுற்றித்தான் வரும் என்றார்.

நடிகர் விஜயகுமார் கூறுகையில், சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் சீரியல் நந்தினிதான் என குறிப்பிட்டார். நடிகை சச்சு இந்த சீரியலில் நடித்து வருகிறார். அவர் கூறும்போது அந்த காலத்தில் ஔவையார் போன்ற மிகப் பெரிய படங்களில் நடித்தபோது போடப்பட்ட செட் மாதிரி நந்தினி சீரியலுக்கு போட்டுள்ளார்கள். சினிமா பட்ஜெட்டில், தயாரிக்கப்படும் நந்தினி 1000ஆவது எபிசோடை நிச்சயம் தொடும் என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nandhini serial is telecasting in Sun Tv. It's 100th episode to be telecasted soon. It si produced in very big budget and Director Sundar .C is producing this serial on first copy basis.
Please Wait while comments are loading...