யம்மாடி.. எம்மாம் பெரிய புயலு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புயல் வரும்போது பேய் மழை பெய்யும், காற்று சுழற்றியடிக்கும், கரண்ட் கட் ஆகும்.. இதுதான் நாம் வழக்கமாக பார்ப்பது. ஆனால் சத்தமே இல்லாமல் ஒரு பயங்கர புயலை "மொட்டை மாடி"யிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும். அந்த உணர்வைக் கொடுத்துள்ளது நாசாவின் "அமேஸிங்" புகைப்படங்கள்.

ஜப்பானையும் தென் கொரியாவையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது நொரு புயல். படு பயங்கரமான இந்தப் புயலை சமாளிக்க இரு நாடுகளும் தயாராகி வருகின்றன. மேற்கு பசிபிக் கடலில் நீண்ட நெடிய பயணத்தில் இருக்கும் நொரு புயல் இந்த வார இறுதியில் இரு நாடுகளையும் தாக்கி கரையைக் கடக்கவுள்ளது.

ஜூலை 20ம் தேதி இந்த புயல் உருவானது. அன்று முதல் பலமடைந்து பெரும் புயலாக உருமாறி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த ஆண்டில் உருவான மிகப் பெரிய பயங்கர புயல் என்ற பெயரும் இந்த நொரு புயலுக்குக் கிடைத்துள்ளது.

நாசாவின் அழகிய படங்கள்

நொரு புயல் எந்த அளவுக்கு பயங்கரமாக இருக்கிறது என்பதை நாசா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டி பயமுறுத்துகின்றன. என்னா மாதிரி புயல்டா இது என்று பீதி அடையும் அளவுக்கு அதில் அந்த புயல் காட்சி காணப்படுகிறது.

ராட்சத கலவை இயந்திரம் போல

மாபெரும் ராட்சத கலவை இயந்திரம் போல இந்த புயல் காணப்படுகிறது. புயல் நிலை கொண்டுள்ள இடத்திலிருந்து கிட்டத்தட்ட 402 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நிலை வலம் வந்தபோது இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

ப்பா.. செம புயல்

இந்தப் படங்கள் அனைத்தும் தற்போது வைரலாக பரவிக் கொண்டுள்ளன. அதில் புயலின் முழுமையான வடிவம், அதன் விஸ்வரூபம் உள்ளிட்டவை படு தெளிவாக காணப்படுகிறது.

3 விண்வெளி வீரர்கள்

3 விண்வெளி வீரர்கள்

இந்தப் புகைப்படங்களை விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களான ஜேக் பிஷர், செர்ஜி ரியாஸன்ஸ்கி மற்றும் ரான்டி பிரஸ்னிக் ஆகியோர் எடுத்துள்ளனர். இதை நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NASA has released some of the amazing images of super cyclone Noru. 3 cosmonauts who are staying in the ISS have taken these stunning images.
Please Wait while comments are loading...